நமது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு.. தகவல்கள் கொண்டு சேர்க்க உரு வாக்கப்பட்டது ..
important information to reach by NEWS and entertainment to our customers at time..
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு எதிரொலி : குமரி மாவட்டத்தில் 50,000 கட்டட பணிகள் முடக்கம்..!!
12:25 am Jun 12, 2021 |
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் 50,000 கட்டட பணிகள் முடங்கியுள்ளன. சிமெண்ட், கம்பி, ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை 35 சதவீதத்தில் இருந்து 125 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் குமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் சுமார் 50,000 கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனை நம்பி பணியாற்றி வந்த பொறியாளர்கள், முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கட்டுமான பொருட்களின் பழைய விலையை வைத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட பணிகளும் தற்போது முடங்கியுள்ளன. புதிய பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு மீளவேண்டிய சூழலில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு பேரிடியாக உள்ளது என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு இதனை கருத்தில் கொண்டு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக