கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதன்கிழமை காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புதன்கிழமை காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்தநிலையில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் வழக்கம்போல் இன்று காலை வழக்கமான பூஜை நடந்துகொண்டிருந்த போது கேவிலின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
காலை பூஜை நடந்து கொண்டிருந்தபோது, கோவில் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிரச்சி அடைந்துள்ளனர்.  ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்