போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு!' - பசி போக்கும் திட்டத்துக்கு கரூர் மக்கள் வரவேற்பு
போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு!' - பசி போக்கும் திட்டத்துக்கு கரூர் மக்கள் வரவேற்பு
உணவு தேவைப்படுவோரின் வீட்டுக்கே சென்று இலவசமாக உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே 3,307 நபர்கள் உணவுத்தேவை என்று தெரிவித்தார்கள்.
`ஊரடங்கில் வீட்டில் இருக்கும் மக்கள் போன் செய்தால், போதும், அவர்களின் வீடுகளுக்கே வந்து உணவு கொடுப்போம்' என்று அறிவித்து, கரூர் மாவட்ட மக்களின் பசியைப் போக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக, இரண்டு பிரத்யேக தொடர்பு எண்களும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் 7-ம் தேதி வரை தமிழகம் முழுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக