சின்ன வெங்காயம் போலி விதைகளை விற்பனை செய்து மோசடி செய்த தனியார் விதை விற்பனை நிலையம் இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தபடும்: விவசாயிகள் எச்சரிக்கை
01:10 pm Jun 08, 2021 | like and Share for updates

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்ன வெங்காயம் போலி விதைகளை விற்பனை செய்து மோசடி செய்த தனியார் விதை விற்பனை நிலையம் இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளிபாளையத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மந்திரிப்பாளையம், குள்ளம் பாளையம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதற்காக விதைகளை வாங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார்.
போலி விதை விற்பனை விவாகாரம் குறித்து அரசு வேளாண் இணை இயக்குனருக்கு புகார் தெரிவித்ததை அடுத்து விளை நிலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் போலி விதைகள் என்பது உறுதியானது. இந்நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் இழப்பீடு தொகையை விதை உற்பத்தி நிறுவனம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். உரிய இழப்பீடு வழங்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக