இந்தியாவில் கோவிட்-19: முக்கிய தகவல்கள்

 


covid-19-update

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 34.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த முக்கிய புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97 நாட்களுக்குப் பிறகு 5 லட்சத்திற்கும் கீழ், 4,95,533 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.62 சதவீதமாகும்.

நம் நாட்டில் இதுவரை 2,96,05,779 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 57,477 பேர் குணமடைந்துள்ளார்கள்.

தொடர்ந்து 51-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்களின் விகிதம் 97.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி 5 சதவீதத்துக்கும் குறைவாக சரிந்து, 2.50 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 26 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.35 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 41.64 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவரை 34.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கருத்துகள்