கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா? கர்நாடகாவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு பாதிப்பு: பெற்றோர்கள் அதிர்ச்சி
கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா? கர்நாடகாவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு பாதிப்பு: பெற்றோர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் மட்டுமே 500 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால், இம்மாநிலத்தில் 3வது அலை தொடங்கிவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாளில் பெங்களூருவில் 500 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை: பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும், கடைசி 5 நாட்களில் மட்டும் 263 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேரும், 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்கள் 175 பேரும் அடங்குவர்,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை இதை விட மூன்று மடங்கு அதிகமாகலாம் என்று எச்சரித்துள்ளது. இதனால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக